பல்லடம் அருகே விஷ மாத்திரை தின்று விவசாயி தற்கொலை

15 தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது விஷ மாத்திரையை தின்று மயங்கி கிடந்துள்ளார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்: 

பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கே.ஆண்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 67). விவசாயி. இவரது மனைவி கடந்த 15 தினங்களுக்கு முன்பு இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் மன வேதனையுடன் இருந்த ராஜாமணி நேற்று தென்னை மரத்திற்கு வைக்கப்படும் விஷ மாத்திரையை தின்று மயங்கி கிடந்துள்ளார். அக்கம்-பக்கம் இருந்தவர்கள் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com