வேளாண் பொறியியல் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிப்பு

இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 மணி வரை விருப்ப கல்லூரி பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

உடுமலை : 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் படிப்புகளுக்கான இணைய வழி கலந்தாய்வில் பங்கேற்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று மாலை 5 மணி வரை விருப்ப கல்லூரி பாடப்பிரிவுகளை தேர்வு செய்யலாம். முன்பு பதிவு செய்தவர்கள், விருப்பங்களை மாற்றி வரிசைபடுத்திக்கொள்ளலாம். இறுதியாக, வரிசை படுத்தப்பட்டுள்ள பட்டியல் இடஒதுக்கீடுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.மேலும் முழுமையான விபரங்களை, http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம். சந்தேகங்கள் இருப்பின் 94886 35077, 94864 25076 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com