உடுமலை அமராவதி வனச்சரகங்களில் யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது

பிளாக் கவுண்ட் முறையில் 15 கிலோமீட்டர் நடந்து நேரடியாக யானைகள் கணக்கிடப்படும்.யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு நடைபெறும்.
யானைகள் கணக்கெடுப்பு குறித்து     களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி. 
யானைகள் கணக்கெடுப்பு குறித்து களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட காட்சி. 
Published on

உடுமலை :

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அளவில் நடைபெறும். அதன்படி தென்னிந்தியாவில் கோவா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி இன்று முதல் 19ந் தேதி வரை நடைபெறுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுகளிலும் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.

முதல் நாளான இன்று பிளாக் கவுண்ட் முறையில் 15 கிலோமீட்டர் நடந்து நேரடியாக யானைகள் கணக்கிடப்படும். நாளை இரண்டு நேர்கோட்டு பாதையில் நடந்து யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு நடைபெறும். நாளை மறு நாள் நீர் நிலைகளுக்கு அருகில் இருந்து நேரடியான முறையில் யானைகளின் எண்ணிக்கை கணக்கீடு செய்யப்படும் .கணக்கெடுப்பு பயிற்சிக்காக களப்பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் தரவு சேகரிப்பு புத்தகம் வழங்கப்பட்டது.

திருப்பூர் வனக்கோட்ட வன உதவி பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ் ராம் தலைமையில் இப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் உடுமலை பேட்டை வனச்சரகஅலுவலர், அமராவதி வனச்சரக அலுவலர், கொழுமம் வனச்சரக அலுவலர் மற்றும் வந்தரவு வனத்துறை அலுவலர், உயிரியலாளர் மகேஷ் குமார், வனவர்கள் ,வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com