திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கருவூலகங்களுக்கு 63 ஆயிரம் முத்திரைதாள்கள் வினியோகம்

மாவட்டத்தில் முத்திரை தாள் தட்டுப்பாடு இருந்தது.7 சார்நிலை கருவூலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 7 சார்நிலை கருவூலகங்களுக்கு 63 ஆயிரம் முத்திரை தாள்கள் வினியோகம் செய்யப்பட்டது.

அரசு அலுவலகங்களில் முத்திரை தாள் பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் 160 முத்திரைதாள் விற்பனையாளர்கள் உள்ளனர். கடந்த 2 வாரம் முன் மாவட்டத்தில் முத்திரை தாள் தட்டுப்பாடு இருந்தது.இதனால் பொதுமக்கள், முத்திரை தாள் விற்பனையாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றனர். தமிழக அரசுக்கு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.இந்நிலையில் சீராக வழங்க வலியுறுத்தி மாவட்ட கருவூலத்தில் முத்திரை தாள் விற்பனையாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதனால் திருப்பூர் மாவட்ட கருவூல அலுவலர் (முத்திரை தாள்) இதுதொடர்பாக கோவை மண்டல இணை இயக்குனருக்கும், சென்னைக்கும் தெரிய ப்படுத்தினார்.இதனைத்தொடர்ந்து அரசின் நடவடிக்கையாக திருப்பூர் மாவட்டத்துக்கு முத்திரை தாள் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த 20ந் தேதி 20 ரூபாய் தாள் 40 ஆயிரம், 100 ரூபாய் தாள் 20 ஆயிரம், 5 ஆயிரம் ரூபாய் தாள் 3 ஆயிரம் எண்ணிக்கை என மொத்தம் 63 ஆயிரம் தாள்கள் திருப்பூருக்கு வந்தது. தொடர்ந்து, இதனை மாவட்டத்தில், 7 சார்நிலை கருவூலகங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது என கருவூலத்துறையினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com