சாமளாபுரம் குளத்தில் விநாயகர் சிலைகள் கரைப்பு

1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

   மங்கலம்:

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாரத்சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் 1200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 26 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்தனர். பல்லடம், மங்கலம், திருப்பூர், சாமளாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை சாமளாபுரம் குளத்தில் கரைப்பதற்கான ஏற்பாடுகளை போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 9 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com