ஆடிப்பெருக்கு அவினாசி கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்

அதிகாலை 4 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிப்பட்ட காட்சி.
பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிப்பட்ட காட்சி.
Published on

அவினாசி:

திருப்பூர் மாவட்டம் அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும் காசிக்கு நிகரான கோவில் போன்ற பல சிறப்பு வாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நேற்று ஆடிபெருக்கை முன்னிட்டு சுவாமி சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடந்தது.

அதிகாலை 4 மணி முதல் சாமி தரிசனம் செய்வதற்காக அவினாசி, கருவலூர், சேவூர், தெக்கலூர், பழங்கரை, மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து குழந்தைகள் பெண்கள், உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதே போல் அவினாசி கரிவரதராஜப்பெருமாள் கோவில், வீர ஆஞ்சநேயர் கோவில், காரணப் பெருமாள் கோவில், ஆகாசராயர் கோவில்,கருவலூர் மாரியம்மன் கோவில், பழங்கரை பொன்சோ ழீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com