பொங்கலூர் பகுதியில் ரூ.2¾ கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் - கலெக்டர் ஆய்வு

பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.
வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்த காட்சி.
Published on

திருப்பூர் : 

பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மாதப்பூர், பொங்கலூர், காட்டூர் ஆகிய ஊராட்சிகளில் நடந்த பல்வேறு திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். மாதப்பூர் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் பாலப்பணி, பொங்கலூர் ஊராட்சி மில் காலனியில் ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடப்பணி, முருகன் நகரில் ரூ.13¼ லட்சம் மதிப்பில் நீர்த்தேக்க தொட்டி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள், அம்மாபாளையத்தில் பட்டு வளர்ப்பு கூடாரம், காட்டூரில் சாலை பணி, தொடக்கப்பள்ளிக்கு கட்டப்பட்டுள்ள கட்டிடம் உள்பட மொத்தம் ரூ.2 கோடியே 80 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித்திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். திட்டப்பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். பின்னர் காட்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்து மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். ஆய்வின்போது பொங்கலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயகுமார், செல்டன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com