ஆடுகளை கொல்லும் வெறிநாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை

ஆட்டுப் பட்டிக்குள் 5 ஆடுகள் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன. கால்நடை மருத்துவரை வரவழைத்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாா்.
வெறிநாய்கள்.
வெறிநாய்கள்.
Published on

காங்கயம்:

காங்கயம் அருகே சிவன்மலை, ராமபட்டினம் பகுதியைச் சோ்ந்தவா் மூா்த்தி (வயது 40). விவசாயியான இவா், 20 செம்மறி ஆடுகள் வளா்த்து வந்துள்ளாா். இந்த நிலையில் ஆடுகளை பட்டியில் அடைத்து விட்டு, வீட்டுக்கு சென்றுள்ளாா்.காலை வந்து பாா்த்தபோது, ஆட்டுப் பட்டிக்குள் 5 ஆடுகள் ரத்தவெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தன.

மேலும் 5க்கும் மேற்பட்ட ஆடுகள் காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த மூா்த்தி, கால்நடை மருத்துவரை வரவழைத்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தாா். வெறிநாய்கள் கடித்ததில் ஆடுகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கால்நடைகளைத் தாக்கி வரும் வெறிநாய்களைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com