பல்லடம் பஸ் நிலையத்தில் பழுதடைந்த தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க கோரிக்கை

தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பாலூட்டும் அறையின் பக்கவாட்டு பகுதியில் சேதமடைந்து பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்துள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை.
சேதமடைந்துள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை.
Published on

பல்லடம்:

பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை,போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்லும். தினமும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேலை, கல்வி, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டது. இதனால் பாலூட்டும் தாய்மார்கள் பயனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாய்மார்கள் பாலூட்டும் அறையின் பக்கவாட்டு பகுதியில் சேதமடைந்து பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த அறையில் சென்று பாலூட்டுவதற்கு தாய்மார்கள் தயங்கி வருகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தாய்மார்கள் பாலூட்டும் அறையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com