100 நாள் வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க கோரிக்கை

கடந்த 7 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அன்றாட செலவுக்கே பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

பொங்கலூா் ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என பொங்கலூா் ஒன்றிய கவுன்சிலா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது குறித்து பொங்கலூா் ஒன்றிய கவுன்சிலா் ஜோதிபாசு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:- தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் 100 நாள் வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கு கடந்த 7 வாரங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. அதனால் அன்றாட செலவுக்கே பணியாளா்கள் அவதியடைந்து வருகின்றனா்.எனவே நிலுவையில் உள்ள ஊதியத்தை பணியாளா்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி விக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com