பாதுகாப்பு ஓய்வூதிய குறைதீர்க்கும் முகாம் - அடுத்த மாதம் 12-ந்தேதி தொடங்குகிறது

ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர். கருத்தரங்கு மண்டபத்தில் நடைபெறுகிறதுவருகின்ற 12.10.2023 வியாழக்கிழமை மற்றும் 13-10-2023 வெள்ளிக்கிழமை என இரண்டு தேதிகளில் நடைபெறுகிறது. ம் தேதிகளில
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

பாதுகாப்புக்கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம் (சென்னை) சார்பில் ராணுவ ஓய்வூதியம் பெறும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களின் குறைபாடுகளை களைவதற்கு பாதுகாப்பு ஓய்வூதிய அதாலத் முகாம் கோவை அவினாசி ரோடு நவ இந்தியா பேருந்து நிறுத்தம் ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எஸ்.என்.ஆர். கருத்தரங்கு மண்டபத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி (வியாழக்கிழமை) மற்றும் 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.இந்த முகாமில் இராணுவ பணி மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர்கள், முன்னாள் படைஅலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பொதுமக்கள் மற்றும் சி.பி.பி.சி., எஸ்.பி.ஏ.ஆர்.எஸ்.எச். மூலமாக ஓய்வூதியம் பெறுபவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு தீர்வு பெறலாம்.

இதற்கான விண்ணப்பத்தினை திருப்பூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெற்று படைவிலகல் சான்று நகல் (முதல் 4 பக்கங்களுடன்), பி.பி.ஓ., எஸ்.பி.ஏ.ஆர்.எஸ்.எச்., இ-பி.பி.ஓ., கோர் பி.பி.ஓ. மற்றும் ஓய்வூதியம் பெறும் வங்கி கணக்கு முதல் பக்கம் மற்றும் நாளது தேதி வரையிலான வரவுப்பதிவு செய்யப்பட்ட கடைசி 2 பக்கங்கள் ஆகிய ஆவண நகல்களுடன் பாதுகாப்பு ஓய்வூதிய அதாலத் அதிகாரி, சி.டி.ஏ. அலுவலகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018 என்ற முகவரிக்கோ அல்லது legaladalatcdachn@gmail.com என்ற இணையதளம் மூலமாகவே அனுப்பலாம். தபால் மூலமாக முடியாத பட்சத்தில் இம்முகாமில் கலந்து கொள்ளலாம்.

இத்தகவலை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தொிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com