உடுமலை அருகே காண்டூர் கால்வாய் கட்டுமான பணிகள் தீவிரம்

மாவட்டத்தில் உள்ள சுமார் 3. 77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பல இடங்களில் கால்வாய் கரைகள் சிதலமடைந்ததால் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது.
பொக்லைன் எந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன் மூலம் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் காட்சி.
பொக்லைன் எந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன் மூலம் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் காட்சி.
Published on

உடுலை:

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கு பரம்பிக்குளம் அணையில் இருந்து காண்டூர் கால்வாய் வழியாக தண்ணீர் கொண்டு வந்து சேமிக்கப்படுகிறது. இதன் மூலம் கோவை திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3. 77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆணடுக்கு 4 மண்டலங்களாக பிரித்து தண்ணீர் வழங்கப்படுகிறது.

காண்டூர் கால்வாய் அடர்வனப் பகுதி வழியாக வருவதால் மழைக்காலங்களில் பாறைகள் சரிந்தும் காரை உடைந்தும் பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கால்வாய் கரைகள் சிதலமடைந்ததால் தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து கால்வாயை புனரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கொண்ட அரசு காண்டூர் கால்வாயில் தரைத்தளம் மற்றும் பக்கவாட்டுப் பகுதியில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக செய்து வருகிறது.

தற்போது பொக்லைன் எந்திரங்கள் மற்றும் ராட்சத கிரேன் மூலம் பணிகள் முழு வீ ச்சில் நடைபெற்று வருகின்றன. நிர்ணிக்கப்பட்ட பகுதிகளில் பணிகள் வேகமாக நடக்கின்றன.

இதனால் இந்த மாத இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com