பட்டா வழங்கிய இடம் ஆக்கிரமிப்பு கோட்டாட்சியரிடம் புகார்

2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது. இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

உடுமலை :

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- மடத்துக்குளம் தாலுகா குமரலிங்கம் பகுதியில் கடந்த 2017 ம் ஆண்டு 96 குடும்பங்களுக்கு குடிமனைபட்டா வழங்கப்பட்டது.

ஆனால் இதுவரை இடம் அளந்து ஒப்படைக்கப்படவில்லை. தற்போது இந்த இடம் தனியார் நபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு 96 குடும்பங்களுக்கு இடத்தை பிரித்து வழங்க வேண்டும். பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என அதில் கூறியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com