பல்லடத்தில் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா

குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார்.
சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்றவர்கள்.
சமுதாய வளைகாப்பு விழாவில் பங்கேற்றவர்கள்.
Published on

பல்லடம்:

பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் 110 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஸ்டெல்லா தலைமை தாங்கினார்.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிகரன் முன்னிலை வகித்தார். வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா வரவேற்றார். பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்து சீர்வரிசை தட்டுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன், பல்லடம் நகர் மன்ற உறுப்பினர்கள் வசந்தாமணி, சபீனா, மற்றும் துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com