கோவை- ராமேஸ்வரம் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் - ரெயில்வே நிலைக்குழு தலைவரிடம் சிவசேனா கட்சியினர் மனு

ரெயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள், பக்தர்கள், வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.மும்பையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் பக்தர்கள் பின்னர் ராமேஸ்வரத்திற்கு ரெயிலில் பயணித்து வந்தனர்.
சிவசேனா கட்சி மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் மனு அளித்த காட்சி. 
சிவசேனா கட்சி மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் மனு அளித்த காட்சி. 
Published on

திருப்பூர் :

ேகாவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு ஏற்கனவே ரெயில் இயக்கப்பட்டு வந்த நிலையில் பின்னர் நிறுத்தப்பட்டது.அந்த ரெயிலை மீண்டும் இயக்க வேண்டுமென பயணிகள், பக்தர்கள் , வியாபாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கோவை வந்த ரெயில்வே நிலைக்குழு தலைவர்ராதாமோகன் சிங்கை சிவசேனா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் திருமுருக தினேஷ் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். அதில் கோவை-ராமேஸ்வரம் ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

அப்போது அங்கிருந்த நிலைக்குழு உறுப்பினரும், சிவசேனா கட்சியை சேர்ந்த மும்பை தெற்கு தொகுதி எம்.பி.யுமான அர்விந்த் சாவந்த் , அந்த ரெயில் வடமாநில பக்தர்களுக்கு பெரிதும் பயன் அளித்து வந்தது. மும்பையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வரும் பக்தர்கள் பின்னர் ராமேஸ்வரத்திற்கு ரெயிலில் பயணித்து வந்தனர். எனவே அதனை இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இது பக்தர்கள் , பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

X

Maalai Malar
www.maalaimalar.com