உடுமலை அருகே மலைவாழ் மக்களுக்கு குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

வன பாதுகாப்புத்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை அமைப்பு சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
முகாமில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
முகாமில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
Published on

 உடுமலை:

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம் மாவடப்பு செட்டில்மென்ட் கிராமத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரியாஸ் அகமது பாசா தலைமையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டம், வன பாதுகாப்புத்துறை மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளை அமைப்பு சார்பில் குழந்தைகள் நலன் மற்றும் மேம்பாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, தன் சுத்தம் பேனல், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுகாப்பது, குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து முறைகள், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் மற்றும் வனப்பகுதியை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள், வன பாதுகாப்பு அலுவலர் மற்றும் எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் மலைவாழ் மக்களுக்கு புரியும் வகையில் எளிமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com