சாணார்பாளையம் பகுதியில் மின் கணக்கீடு முறையில் மாற்றம்

சாணார்பாளையம் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கணக்கீடு நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்படுகிறது. கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

திருப்பூர்:

திருப்பூர் மின் பகிர்மான வட்டம் திருப்பூர் கோட்டம் நல்லூர் பிரிவு அலுவலகத்தை சேர்ந்த சாணார்பாளையம் மின்பகிர்மானத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் கணக்கீடு நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்யப்படுகிறது.

அதன்படி இது இரட்டைப்படை மாதத்தில் இருந்து ஒற்றைப்படை மாத கணக்கீடு செய்யப்பட உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது. இதனால் சாணார்பாளையம் பகிர்மான பகுதிகளான காளிபாளையம், குப்பாண்டம்பாளையம், வஞ்சிபுரம்புதூர், எம்.ஜி.ஆர்.நகர், காங்கயம்பாளையம், சாணார்பாளையம் பகுதிகளில் மின் நுகர்வோர் இனி வரும் காலங்களில் ஜனவரி மார்ச், மே, ஜூலை, செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கணக்கீடு செய்யப்பட்டு, கணக்கீடு செய்யப்பட்ட நாளில் இருந்து 20 நாட்களில் மின் கட்டணம் செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com