உடுமலையில் தீப்பற்றி எரிந்த கார்

காரின் முன்பாகம் முழுவதுமாக எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
 தீப்பற்றி எரிந்த காரை படத்தில் காணலாம். 
 தீப்பற்றி எரிந்த காரை படத்தில் காணலாம். 
Published on

 உடுமலை :

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் மனிகண்டன். இவரது மனைவிக்கு பிரசவசவலி ஏற்படவே உறவினரின் காரில் உடுமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்துள்ளார்.

அரசு மருத்துவமனை வாயிலில் வரும்போது காரிலிருந்து லேசாக புகைவர அவசரமாக மனைவி கவிதா மற்றும் அவரது உறவினர்களுடன் இறங்கிய மணிகண்டன் அவர்களை உள்ளே செல்ல சொல்லிவிட்டு காரின் அருகே வருவதற்குள் காரில் தீ பற்றி மளமளவென எரிந்தது. இதில் காரின் முன்பாகம் முழுவதுமாக எரிந்தது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com