வெள்ளகோவிலில் பஸ் கண்ணாடி உடைப்பு-பரபரப்பு

கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் :

கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் அருகே வரும்போது வெள்ளகோவில் எம்.பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 45) என்பவர் குடிபோதையில் பஸ் கண்ணாடியை கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் பஸ் கண்ணாடி உடைந்து விட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி தப்பினர்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com