ஆறுமுத்தாம்பாளையம் பள்ளி மாணவர்களுக்காக பஸ் வசதி

மாணவ, மாணவிகளுக்கு மாலை பள்ளி முடிந்து திரும்புவதற்கு பேருந்து வசதி வேண்டி மனு அளிக்கப்பட்டுள்ளது.பழைய பேருந்து நிலையத்திலிருந்து 30-ஏ நகரப்பேருந்து மாலை 4.10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

பல்லடம் வட்டம், ஆறுமுத்தாம்பாளையம் அறிவொளிநகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாலை பள்ளி முடிந்து திரும்புவதற்கு பேருந்து வசதி வேண்டி 4.7.2023 அன்று நாளிதழில் செய்தி வெளியானது.

இதையடுத்து தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவின் பேரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 30-ஏ நகரப்பேருந்து மாலை 4.10 மணி கால அட்டவணையின் படி பல்லடம் வட்டம், ஆறுமுத்தாம்பாளையம், அறிவொளி நகர் அரசு உயர் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com