வெள்ளகோவிலில் ரத்ததான முகாம்

பொதுமக்களிடமிருந்து மொத்தம் 150 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் சத்யராஜிடம் வழங்கினர். ரத்ததானம் வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

வெள்ளகோவில்:

வெள்ளகோவிலில் மே தினத்தையொட்டி வெள்ளகோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பு, மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளையின் தலைவர் ராஜ்குமார் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமை வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி துவக்கி வைத்தார்.முகாமில் தொழிலதிபர்கள், மகாத்மா காந்தி நற்பணி மன்ற உறுப்பினர்கள், ஆயிர நகர வைசியர் இளைஞர் அமைப்பினர், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 150 யூனிட் ரத்தம் பெறப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் மருத்துவர் சத்யராஜிடம் வழங்கினர்.

முகாமில் வெள்ளகோவில் ஆயிர நகர வைசிய இளைஞர் அமைப்பு நிர்வாகிகள் முரளி, சிவக்குமார், சரவணன், ஆர்.என். சரவணபவன் மற்றும் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.முகாம் ஏற்பாடுகளை மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை உறுப்பினர் அஜித்குமார், தனுஷ்ராம் ஆகியோர் செய்து இருந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com