மடத்துக்குளத்தில் ரத்ததான முகாம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமில் 100 பேர் ரத்ததானம் அளித்தனர்.
முகாமில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
முகாமில் கலந்து கொண்டவர்களின் காட்சி.
Published on

மடத்துக்குளம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஈஸ்வர சாமி வரவேற்று பேசினார். மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், நாகராஜ், செல்வி ,சேதுபால் ,நடராஜன், செல்லப்பன் ,விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரத்ததான முகாமை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் , ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் துவக்கி வைத்தார் . இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், மாவட்ட பொருளாளர் முபாரக் அலி தலைமை செயற்குழு உறுப்பினர் மகாலிங்கம், ராமசாமி பாபு , ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் காவிய ஐயப்பன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் லதா பிரியா ஈஸ்வர சாமி, மடத்துக்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கலைவாணி பாலமுரளி உட் பட பலர் கலந்து கொண்டனர்.

முகாமில் 100 பேர் ரத்ததானம் அளித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com