பள்ளி சுவர்களில் அழகிய ஓவியங்கள்

திருப்பூரின் சிறப்பு வேளாண்மை தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டன. பள்ளிகளின் சுவர்களிலும் விடுதலை போராட்ட தியாகிகள் வரையப்பட்டன.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகள், மாநகராட்சிக்குச் சொந்தமான கட்டடம், சுவர்களில் விளம்பரம் எழுதுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற செயல்கள் சகஜமாக காணப்பட்டது. இதனால் சுவர்கள் அலங்கோலமாக காணப்பட்டன.

இதையறிந்த மாநகராட்சி நிர்வாகத்தினர் மைய அலுவலகம் மற்றும் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடங்களின் சுற்றுச்சுவர்களில் அழகிய ஓவியங்கள் வரையும் பணியை மேற்கொண்டனர். மைய அலுவலக சுற்றுச் சுவரில் திருப்பூரின் சிறப்பு மற்றும் உழவர் சந்தை சுற்றுச்சுவரில் வேளாண்மை தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டன.

மாநகராட்சி பள்ளிகளின் சுவர்களிலும் விடுதலை போராட்ட தியாகிகள், வரலாற்று கதாபாத்திரங்களின் உருவங்கள் வரையப்பட்டன. இதனால் பள்ளி சுவர்களில் விளம்பரங்கள், போஸ்டர்கள் போன்ற அலங்கோலம் தவிர்க்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com