திருப்பூரில் பூப்பந்தாட்ட போட்டி நாளை நடக்கிறது

திருப்பூர் மாவட்ட அணியின் சார்பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்று விளையாடலாம். போட்டிகளில் பங்கு பெற விரும்புபவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கு பெறலாம்.
திருப்பூரில் பூப்பந்தாட்ட போட்டி நாளை நடக்கிறது
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகத்தின் சார்பில் இளையோர் மற்றும் மிக இளைேயாருக்கான மாவட்ட அளவிலான ஐவர் தேர்வு திறன் பூப்பந்தாட்ட போட்டிகள் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு சின்ன சாமி அம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நாளை 4-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை ) காலை 8மணிக்கு நடக்கிறது.

இதில் இளையோர் பிரிவில் பங்கேற்க 1-1-2003 அன்றோ அல்லது அதற்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும். மிக இளையோர் பிரிவுக்கு 1-1-2007 அன்றோ அல்லது அதற்கு பின் பிறந்தவராக இருக்க வேண்டும்.

போட்டிகளில் பங்கு பெற விரும்புபவர்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ பங்கு பெறலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகளில் தேர்வு செய்யப்படுபவர்கள் திருப்பூர் மாவட்ட அணியின் சார்பில் மாநில சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கு பெற்று விளையாடலாம்.

போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் ஆதார் நகல் மற்றும் வயது சான்று நகல் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.  

X

Maalai Malar
www.maalaimalar.com