காதல் திருமணம் செய்தவரின் அண்ணன் மீது தாக்குதல்

உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

அவினாசி :

அவினாசி கமிட்டியார்காலனியைச் சேர்ந்தவர் மதன்குமார் (வயது 23) .இவர் அதே பகுதியில் வசிக்கும் ரஞ்சனி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். உறவினர்களுக்கு பயந்து காதலர்கள் அவினாசி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலையில் ரஞ்சினியின் தாய்மாமா கிருஷ்ணசாமி மற்றும் தினேஷ்,கோபி ஆகியோர் மதன்குமாரின் அண்ணன் நரேந்திரன் வீட்டுக்கு சென்று உன் தம்பி எப்படிடா எங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாம் என மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அடித்துள்ளனர். இதில் நரேந்திரன் காயம் அடைந்தார்.

இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஒப்படைத்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். காயம் அடைந்த நரேந்திரன் சிகிச்சைக்காக அவினாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com