உடுமலையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

போதைப்பொருள் ஒழிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி மாணவிகள் சாலையில் நடந்து சென்றனர். போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பதாகைகள் ஏந்தியும் வாசகங்களையும் கூறினர்.
 விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.
 விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற காட்சி.
Published on

உடுமலை :

உடுமலை பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், போதை பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பொறுப்பு ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலையில் தமிழ் ஆசிரியர்கள் சின்னராசு, ராஜேந்திரன் மற்றும் ஆங்கில பட்டதாரி ஆசிரியர் ரம்யா ஆகியோர் வழி நடத்தினர். போதைப்பொருள் ஒழிப்போம் என்ற கோஷங்களை எழுப்பி மாணவிகள் சாலையில் நடந்து சென்றனர்.

போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய பதாகைகள் ஏந்தியும் வாசகங்களையும் கூறினர். பள்ளியில் மாணவிகள் மது ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com