இத்தாலி ஜவுளி கண்காட்சியில் பங்கேற்க ஏற்றுமதியாளர்களுக்கு ஏ.இ.பி.சி., அழைப்பு

இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் ஜூலை 11ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது.கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக திருப்பூருக்கு இத்தாலி ஆர்டர் அதிகரிக்கும்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

ரெடி டூ ேஷா என்ற சர்வதேச ஜவுளி கண்காட்சி இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் ஜூலை 11ந் தேதி துவங்கி 13-ந் தேதி வரை நடக்கிறது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், விளையாட்டு ஆடைகள், உள்ளாடைகள், நீச்சல் ஆடைகள், தோல் ஆடைகள், பின்னலாடைகள், கண்காட்சியில் இடம்பெறுகின்றன.

ஐரோப்பிய நாடுகளுக்கான முக்கிய ஆயத்த ஆடை வடிவமைப்பு நிறுவனங்களும் ஜவுளி உற்பத்தியாளர்களும் பங்கேற்கின்றனர். திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்க ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) ஏற்பாடு செய்துள்ளது.

கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக திருப்பூருக்கு இத்தாலி ஆர்டர் அதிகரிக்கும். குறிப்பாக பருத்தி ஆடைகளுடன் செயற்கை நூலிழை ஆடை வர்த்தகம் தொடர்பான விசாரணையும் நடக்கும். எனவே திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் இத்தாலி கண்காட்சியில் பங்கேற்க முன்வரலாம் என ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து ஏ.இ.பி.சி., நிர்வாகிகள் கூறுகையில்,இத்தாலியில் நடக்கும் கண்காட்சியில் பங்கேற்பதால் திருப்பூருக்கான வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும். கண்காட்சியில் பங்கேற்க விரும்புவோர் தொடர்புகொள்ளலாம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com