அனுமதி பெறாமல் இயங்கிய 53 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

இயக்க விவரங்களை தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து முன் அனுமதி பெறவேண்டும்.வணிக நிறுவனம், உணவு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திருப்பூர்:

தேசிய விடுமுறை நாட்களில் இயங்கும் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும். அல்லது மாற்று விடுப்பு வழங்கவேண்டும். இயக்க விவரங்களை தொழிலாளர் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து முன் அனுமதி பெறவேண்டும்.

மே தினமான கடந்த 1ந் தேதி, அனுமதி பெறாமல் இயங்கிய நிறுவனங்கள் குறித்து, திருப்பூர் தொழிலாளர் துறை அமலாக்க உதவி கமிஷனர் (பொறுப்பு) செந்தில்குமரன் தலைமையில் தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருப்பூர் நகர், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதி கடைகள், வணிக நிறுவனம், உணவு நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. 35 கடைகள், நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 23 நிறுவனங்கள், 38 உணவு நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், 30 என 53 நிறுவனங்கள் முறையான அனுமதி பெறாமல் இயங்கியது கண்டறியப்பட்டது. அந்நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com