தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம்

தினசரி ஏராளமான மக்கள் ஆதார் சேவை மையங்களில் திரள்கின்றனர்.ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களின் ஆதார் சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.
தபால்துறை சார்பில் ஆதார் சிறப்பு முகாம்
Published on

திருப்பூர் :

மக்களின் வங்கி சார்ந்த பணிகள், அரசின் நலத்திட்டங்கள், மானிய உதவி, வங்கிக்கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து தேவைகள் சார்ந்தும், ஆதார் எண் அவசியமாகிறது. இதனால் புதிய ஆதார் அட்டை வாங்க, ஏற்கனவே உள்ள ஆதார் எண்ணில் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது என தினசரி ஏராளமான மக்கள் ஆதார் சேவை மையங்களில் திரள்கின்றனர்.

தாலுகா வாரியாக தாலுகா அலுவலகம், ஒரு சில தபால் அலுவலகம், வங்கிக் கிளைகளில் மட்டுமே ஆதார் சார்ந்த பணிகள் நடந்து வரும் நிலையில், மக்களின் தேவை பூர்த்தியாவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்நிலையில், தபால் துறை சார்பில் கிராம ஊராட்சிகள் தோறும் ஆதார் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களின் ஆதார் சார்ந்த தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன.

இதனால், தபால் துறைக்கும், சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்துக்கும்திருப்பூர் கிராம மக்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com