நல்லூர் அருகே பிரியாணி கடை முன்பு மயங்கி விழுந்தவர் சாவு

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் காங்கேயம் ரோடு நல்லூரை அடுத்த பள்ளக்காட்டுப்புதூரில் உள்ள ஒரு பிரியாணி கடை முன்பு சம்பவத்தன்று சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்து விட்டதாக நல்லூர் கிராம நிர்வாக அதிகாரிக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் நல்லூர் ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இறந்து கிடந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த நபர் பச்சை, சிமெண்ட், வெள்ளை நிறம் கலந்த டீ-சர்ட் அணிந்திருந்தார். அவருடைய வலது மார்பின் கீழ் பகுதியில் கருப்பு மச்சமும், வலது கால் பாதத்தின் மேல்பகுதியில் காயத்தழும்பும் உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com