காங்கயம் அருகே கிணற்றில் விழுந்த மயில் உயிருடன் மீட்பு

60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது. தீயணைப்பு நிலைய வீரா்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

காங்கயம் :

காங்கயம் அருகே, செம்மங்காளிபாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் மயில் விழுந்துள்ளது. 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது. தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

மீட்கப்பட்ட மயில் காங்கயம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் ஊதியூா் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com