சின்னமுத்தூரில் பரிதாபம் போதையில் கிணற்றில் தவறி விழுந்து கட்டிட தொழிலாளி சாவு

வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கிணற்றில் விழுந்த ராஜேஷை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

வெள்ளகோவில் ூ

வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த அன்பரசன் மகன் ராஜேஷ் (வயது 28). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள சின்னமுத்தூரில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். நேற்று மாலை சின்ன முத்தூரில் உள்ள கிணற்றில் குடிபோதையில் ராஜேஷ் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வெள்ளகோவில் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் வெள்ளகோவில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றில் விழுந்த ராஜேஷை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது ராஜேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com