பல்லடம் அருகே சரக்கு வேன் பாலத்தில் கவிழ்ந்து விபத்து

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர பாலத்தின் கீழ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.சரக்கு வேனில் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர்.
பாலத்தின் கீழ் கவிழ்ந்த சரக்கு வேனை படத்தில் காணலாம்.
பாலத்தின் கீழ் கவிழ்ந்த சரக்கு வேனை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடத்திலிருந்து சரக்கு வேன் ஓன்று கறிக்கோழிகளை ஏற்றிக்கொண்டு கேரளா சென்று விட்டு மீண்டும் பல்லடத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. வேனை கமுதியை சேர்ந்த குமரவேல் (வயது 34) என்பவர் ஓட்டி வந்தார்.

ஆரோக்கியசாமி(38) என்பவர் உடன் வந்துள்ளார். இந்தநிலையில் சரக்கு வேன் பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில் க.அய்யம்பாளையம் என்ற இடம் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள சாலையோர பாலத்தின் கீழ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் சரக்கு வேனில் இருந்த இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com