பல்லடத்தில் நடுரோட்டில் கவிழ்ந்த சரக்கு வேன்

ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது. பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்ட சரக்கு வேனை படத்தில் காணலாம்.
 சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்ட சரக்கு வேனை படத்தில் காணலாம்.
Published on

 பல்லடம் :

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையத்திலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் ஓன்று திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. பல்லடம் - திருப்பூர் மெயின் ரோட்டில் வெட்டுப்பட்டான் குட்டை என்ற இடம் அருகே சென்றுக்கொண்டு இருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் வேன் நிலை தடுமாறி கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த குமரேசன் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பல்லடம் போலீசார் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com