7-வது நாளாக நீடிக்கும் உண்ணாவிரதம் - விவசாயிகளுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை

கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி 7-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். வருவாய் அதிகாரிகள் விவசாயி விஜயகுமார், மற்ற விவசாயிகள் ஆகியோருடன் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர்.
7-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும்  விவசாயி விஜயகுமார். விவசாயிகளுடன் இன்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 
7-வது நாளாக உண்ணாவிரதம் இருக்கும் விவசாயி விஜயகுமார். விவசாயிகளுடன் இன்று அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி. 
Published on

மங்கலம் :

திருப்பூர் மாவட்டம்பல்லடம் ஒன்றியம் ,இச்சிப்பட்டி ஊராட்சி கொத்துமுட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40).இவர் கடந்த 30-ந்தேதி வீட்டின் முன்பு கூடாரம் அமைத்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.இவர் கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கூறி இன்று 7-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் , கனிமவளத்துறை அதிகாரிகள், மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம் ஒன்றியம் ,கொத்துமுட்டிபாளையம் அருகே உள்ள கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் விதிகளை மீறி கல்குவாரி செயல்படுகிறதா என ஆய்வு செய்தனர். பின்னர் ஆய்வு முடிவடைந்த பின்னர் பல்லடம் தாசில்தார் நந்தகோபால் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயி விஜயகுமாரிடம் " கல்குவாரியில் ஆய்வு செய்துள்ளோம்.ஆகவே உண்ணாவிரதப்போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டார். எனினும் பேச்சுவார்த்தையில் சமரசம் அடையாத விஜயகுமார் "கோடங்கிபாளையம்பகுதியில் செயல்படும் தனியார் கல்குவாரி உரிமத்தை ரத்து செய்யும் வரை உண்ணாவிரதப்போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்தார். தொடர்ந்து 7-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

மேலும் விவசாயி விஜயகுமாரின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் விவசாயிகள் இணைந்து கோடங்கிபாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் குதிக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் அதிகாரிகள் விவசாயி விஜயகுமார், மற்ற விவசாயிகள் ஆகியோருடன் போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com