பல்லடம் அருகே வக்கீலை தாக்கிய 3 வாலிபர்கள் கைது

கடையில் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் கடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார்.காயமடைந்த ஹரிகரன் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார்.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கிட்டாபுரம் பகுதியை சேர்ந்த ஆனந்தன் என்பவரது மகன் ஹரிகரன் (வயது 24). இவர் கோயமுத்தூரில் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று ஹரிகரன், வெங்கிட்டாபுரத்தில் உள்ள முடி திருத்தும் கடைக்கு முடி வெட்ட சென்றுள்ளார்.

அங்கு கடையில் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில் கடையில் உள்ள இருக்கையில் அமர்ந்து இருந்தார். அப்போது அங்கிருந்த விக்னேஷ் என்பவரது மீது ஹரிகரன் கால் தவறுதலாக பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த விக்னேஷ், ஹரிகரனை திட்டியதாக தெரிகிறது. இதையடுத்து இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

உடனே அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து இருவரையும் அனுப்பினர். இதற்கிடையே ஹரிகரன், மேற்கு பல்லடம் பகுதிக்கு சென்றபோது அங்கு நண்பர்களுடன் இருந்த விக்னேஷ், ஹரிகரனிடம் மீண்டும் தகராறு செய்து அவரை தாக்கி உள்ளார்.

இதில் காயமடைந்த ஹரிகரன் இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கு பல்லடத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரது மகன் விக்னேஷ் (28), முருகன் என்பவரது மகன் கேசவன் (23), ஆறுமுகம் என்பவரது மகன் பரமசிவம் (23), ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com