பால் பாக்கெட்களை திருடி விற்ற 2 பேர் கைது

பால் பாக்கெட்களை அனுப்புவதற்காக சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர்.பால் பாக்கெட்களை ஆய்வு செய்த போது, பால் பாக்கெட்கள் அதிகம் இருப்பது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
கைது செய்யப்பட்டவர்களை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம்:

பல்லடம் அருகே தனியாருக்கு சொந்தமான பால் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு கோவை மணியக்காரன்பாளையத்தை சேர்ந்த கௌதம் (வயது34) சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பால் பாக்கெட்களை அனுப்புவதற்காக சரக்கு வேன் வாடகைக்கு எடுத்து அனுப்பி வருகின்றனர்.

இதன் ஓட்டுனராக பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது மகன் செந்தில்குமார் (வயது41) பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, பால் நிறுவனத்தில் இருந்து, குறிப்பிட்ட அளவுக்கு மேல் பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்று விற்பனை செய்து வந்தனர்.

இதற்கிடையே நேற்று சரக்கு வேனில் ஏற்றப்பட்ட பால் பாக்கெட்களை நிறுவன மேலாளர் சகாய பாபு ஆய்வு செய்த போது, குறிப்பிட்ட அளவைவிட பால் பாக்கெட்கள் அதிகம் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் விசாரித்த போது இருவரும் பால் பாக்கெட்களை திருடி விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து அவர்கள் இருவரையும் பல்லடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து, பால் பாக்கெட்டுகள் திருட்டு குறித்து மேலாளர் சகாய பாபு புகார் அளித்தார். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com