பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது

சமூக வலைதளத்தில் பழகி துணிகரம் இ-மெயில் முகவரி மற்றும் போன் எண்ணை வைத்து விசாரணை
பெண்ணிடம் செயின் பறித்த வாலிபர் கைது
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த திருமணமான 36 வயது பெண்ணுக்கும், திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

அந்த நபர் தனது பெயரை பிரகதீஷ் என பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து பிரகதீஷை அந்த பெண் தனது வீட்டிற்கு அழைத்து உள்ளார். இதையடுத்து அவர் நேற்று முன்தினம் பெண்ணின் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது பிரகதீசை அந்த பெண் அணிந்து இருந்த நகைகள் தங்கமா என விசாரித்து உள்ளார். அந்த பெண் தனது தாலி மட்டும் தங்கம் என கூறியுள்ளார்.

இதையடுத்து திடீரென பிரகதீஷ், பெண்ணின் கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து பெண் அளித்த புகாரின்பேரில் குரிசிலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்து சென்ற வாலிபர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த இ-மெயில் முகவரி மற்றும் போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து திண்டுகல் மாவட்டத்தை சேர்ந்த பிரகதீஷ்வரனை போலீசார் ைகது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com