தொழிலாளி தீக்குளித்து சாவு

திருமணமாகாததால் விரக்திபோலீசார் விசாரணை
தொழிலாளி தீக்குளித்து சாவு
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அபேத்கார் நகர் பகுதியை சேர்ந்த செல்வம் மகன் அசோக் ராஜ் (36) சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகாததால் மன வேதனையில் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அசோக்ராஜை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அசோக்ராஜ் உயிரிழந்தார். இது குறித்து உமராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com