பெண் ரெயில் மோதி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம்போலீசார் விசாரணை
பெண் ரெயில் மோதி பலி
Published on

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி புதூர் ரெயில்வே கேட் அருகே உள்ள சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகள் சகுந்தலா (வயது 48). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் நேற்று இரவு சக்தி நகரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு சென்றார்.

அப்போது புதூர் கேட் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றார். ஜோலார்பேட்டையில் இருந்து காட்பாடி நோக்கி சென்ற கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் சகுந்தலா மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஜோலா ர்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

சகுந்தலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com