பெண் வெட்டி கொலை

முன் விரோதத்தால் ஆத்திரம்தந்தை-மகன் கோர்ட்டில் சரண்
பெண் வெட்டி கொலை
Published on

வாணியம்பாடி:

ஆலங்காயம் அடுத்த குப்பம் பகுதியை சேர்ந்தவர்கள் சங்கர் மற்றும் சண்முகம் உறவினர்கள். இவர்கள் 2 பேருக்கும் நில சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி சங்கர் மற்றும் சண்முகம் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 2 குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சண்முகம் மற்றும் அவரது மகன்களான ஜெயமோகன் (39), ரஞ்சித் குமார் ஆகியோர் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சங்கர் குடும்பத்தினரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் சங்கரின் மனைவி ஜெயந்தி தலை உள்ளிட்ட பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலையில் ஜெயந்தி மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயந்தி நேற்று பரிதாபமாக இறந்தார். இது சம்பந்தமாக ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆலங்காயம் ரஞ்சித் குமாரை கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள சண்முகம் மற்றும் ஜெயமோகனை தேடி வந்தனர். ஜெயந்தி உயிரிழந்ததால் போலீசார் கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சண்முகம் அவரது மகன் ஜெயமோகன் ஆகியோர் திருப்பத்தூர் குற்றவியல் கோர்ட்டில் சரணடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com