ஆம்பூரில் வியாபாரி மாயம்

வியாபாரத்துக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை
ஆம்பூரில் வியாபாரி மாயம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் டவுன் சாய்பாபா தெருவை சேர்ந்தவர் முரளி (வயது 35). தொடப்பம் வியாபாரி. இவருக்கு மனைவி 2 பிள்ளைகள் உள்ளனர்.

கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 18-ந் தேதி வியாபாரத்துக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. தாயார் விஜயா பல்வேறு இடங்களில் தேடியும் இவர் கிடைக்கவில்லை.

இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வியாபாரியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com