ஆம்பூர் ரெயில் நிலையத்தில் திருப்பதி-மைசூர் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்

கொரோனா பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்டன பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
ஆம்பூர் ரெயில் நிலையத்தில் திருப்பதி-மைசூர் ரெயில் சேவை மீண்டும் தொடக்கம்
Published on

ஆம்பூர்:

ஆம்பூரில் உள்ள பல்வேறு தோல் தொழிற்சா லைகள், காலணி தொழிற்சாலைகளின் தலைமை அலுவலகங்கள் சென்னையில் அமைந்துள்ளது.

அதனால் ஆம்பூரிலி ருந்தும் சென்னைக்கு ரெயில் மூலம் பணியாளர்கள் சென்று வருகின்றனர். அதே போல வியாபார நிமிர்த்தமாக ஆம்பூரிலிருந்து, வெளியூர்க ளுக்கும், வெளியூரிலிருந்து ஆம்பூருக்கும் வரும் வியாபாரிகள் ரெயில் சேவையையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

மேலும், ஆம்பூரை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பல்வேறு ஊர்களில் உள்ள கல்லூரிகளுக்கு ரெயில் மூலம் சென்று வருகின்றனர்.

கடந்த கொரோனா பொது முடக்கத்தின் போது ரெயில், பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டன. பிறகு படிப்படியாக பொது போக்குவரத்து சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.

ஆம்பூர் ரெயில் நிலையத்தில் தடை செய்யப்பட்ட திருப்பதி-மைசூர் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது.

அதன்படி திருப்பதி -மைசூர் செல்லும் ரெயில் நேற்று இரவு முதல் ஆம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கிறது. இதனால் பயணிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com