முதியவர் தீயில் கருகி பலி

குப்பைகளை எரித்த போது பரிதாபம் அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர்
முதியவர் தீயில் கருகி பலி
Published on

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பெரியா ங்குப்பத்தை சேர்ந்தவர் மார்கன் (வயது 80). இவரது வீட்டின் அருகே ஏராளமான குப்பைகள் இருந்தது.

அந்த குப்பைகள் காற்றில் பறந்தது. நேற்று மாலை சேகரித்து குவியலாக வைத்தார். பின்னர் தீ மூட்டி குப்பைகளை எரித்தார். அப்போது மார்கன் அணிந்திருந்த வேட்டியின் மீது திடீரென தீப்பொறி வேகமாக எரிய தொடங்கியது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மார்கன் மீது எரிய தொடங்கிய தீயை அணைக்க முயன்றனர். இதில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார்.

படுகாயம் அடைந்த அவரை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக மார்கன் இறந்தார்.

இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மார்கன் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com