லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை பலி

மகன் கண் எதிரே பரிதாபம் போலீசார் விசாரணை
லாரி சக்கரத்தில் சிக்கி தந்தை பலி
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள புத்தகரம் ஊராட்சி முத்தாகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கன் (வயது 54). அதே பகுதியில் டெய்லராக உள்ளார்.

இவரது மகன் குமரவேல் (35). சிங்கப்பூரில் வேலை பார்த்த இவர் தற்போது சொந்த ஊரில் வசித்து வருகிறார்.

இவர்களது உறவினர் சுந்தரம்பள்ளி அருகே உள்ள வேலவெள்ளி கிராமத்தில் இறந்துள்ளார்.

இதற்காக ரங்கன், குமரவேல் சென்றனர். அங்கிருந்து இருவரும் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டனர். ரங்கன் பின்னால் அமர்ந்திருந்தார்.

காக்கங்கரை ஏரி பகுதியில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அதே வழியாக வந்த டிப்பர் லாரி மோட்டார் சைக்கிளை முந்தி சென்றபோது மோட்டார் சைக்கிள் கண்ணாடி மீது உராய்ந்து நிலை தடுமாறிய மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த ரங்கன் லாரி பின் சக்கரத்தில் விழுந்தார்

இதில் ரங்கன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். குமரவேல் வலது புறமாக விழுந்து பலத்த காயமடைந்தார். கந்திலி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com