கல்குவாரி மேலாளரை தாக்கிய வாலிபர்கள்

பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது போலீசார் வலை வீச்சு
கல்குவாரி மேலாளரை தாக்கிய வாலிபர்கள்
Published on

ஆம்பூர்:

ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). இவர் விண்ணமங்கலம் பகுதியில் உள்ள கல்குவாரியில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இதன் அருகே மற்றொரு கல்குவாரி உள்ளது.

இந்த நிலையில் வெங்கடேசனுக்கும் அருகே கல்குவாரி நடத்தி வரும் 27 வயதுடைய வாலிபருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் மின்னூர் பகுதியை சேர்ந்த ஒருவருடன் சேர்ந்து வெங்கடேசனை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் வெங்கடேசனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அருகே இருந்தவர்கள் படுகாயம் அடைந்த வரை மீட்டு வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தினர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வெங்கடேசன் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com