பிறந்த நாள் பலூன் விழுந்த தகராறில் வாலிபருக்கு கத்தி வெட்டு

கணவன் - மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு போலீசாார் விசாரணை
பிறந்த நாள் பலூன் விழுந்த தகராறில் வாலிபருக்கு கத்தி வெட்டு
Published on

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட அம்பேத் கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தென்னரசு (வயது 29). இவரது மகள் பிறந்த நாள் விழாவை கடந்த மாதம் 26-ந் தேதி பலூன் கட்டி கொண்டாடினர்.

இந்தநிலையில் நேற்று காலை தென்னரசு தனது வீட் டில் கட்டி வைத்து இருந்த பலூனை அப்புறப்படுத்தி கொண்டு இருந்தார்.

அப்போது பலூன் ஒன்று எதிர் வீட்டில் வசிக்கும் தமி ழரசன் வீட்டில் விழுந்தது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது தமிழரசன், அவரது மனைவி சாவிதா மற்றும் ராணி ஆகிய 3 பேரும் சேர்ந்து தென்னரசுவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

மேலும் தமி ழரசன் தான் மறைத்து வைத்து இருந்த பட்டன் கத் தியால் தென்னரசு தலை மீது வெட்டியதால் படுகாயம் அடைந்தார்.

அவரை சிகிச் சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து தென்னரசு கொடுத்த புகாரின் பேரில் ஜோலார் பேட்டை போலீசார் தமிழர சன் சாவிதா மற்றும் ராணி ஆகிய 3 பேர் மீதும் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com