ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் ஆய்வு கூட்டம்

அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் ஆய்வு கூட்டம்
Published on

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டார அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடந்தது.

இதில் அரசின் பல்வேறு நல திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைகிறதா? சென்றடையாதவை ஏதேனும் இருந்தாலோ, பின்னடைவு இருந்தாலோ அதை சரி செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com