நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சுகாதார துறை இணை இயக்குனர் ஆய்வு

இன்னூயிர் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா? முதல்- அமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் குறித்து எடுத்துரைத்தார்
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறித்து சுகாதார துறை இணை இயக்குனர் மாரிமுத்து கேட்டறிந்த காட்சி.
நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை குறித்து சுகாதார துறை இணை இயக்குனர் மாரிமுத்து கேட்டறிந்த காட்சி.
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ள கலைஞர் தெருவில் அமைந்துள்ள நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் தினம்தோறும் நாட்டறம்பள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதார மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து திடீரென்று நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது டாக்டர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் அனைவரும் தங்களது ஒதுக்கப்பட்ட பணிகள் சரிவர செய்கின்றன என ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக அரசின் இன்னூயிர் காப்போம் திட்டம் அரசு மருத்துவமனையில் சரியாக பயன்படுத்தி வருகின்றனரா எனவும் மற்றும் நிலுவையில் உள்ள தணிக்கைகள் முதலமைச்சர் விரிவான காப்பீடு திட்டம் குறித்து என டாக்டர்களிடம் எடுத்துரைத்தார்.

அதன் பிறகு புறநோயாளிகளிடமும் அறுவை சிகிச்சை செய்து கொண்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிகள் தங்கி உள்ள அனைத்து வார்டுகளில் நேரிடையாக சென்று டாக்டர்கள் அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

மேலும் அரசு மருத்துவமனை முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தூய்மையாக வைத்து இருக்க வேண்டும் என இணை இயக்குநர் மாரிமுத்து டாக்டர்களிடம் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com