போதைபொருள் விற்ற கடைக்காரர் கைது

சிறையில் அடைத்தனர்52 பாக்கெட்டுகள் பறிமுதல்
போதைபொருள் விற்ற கடைக்காரர் கைது
Published on

ஜோலார்பேட்டை:

நாட்டறம்பள்ளி பகுதியில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு குறித்து நாட்டறம்பள்ளி போலிஷ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நேற்று நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கடையில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனையெடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 52 பாக்கெட் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com